Thiru Arut Prakasa Vallalar

“உயிருள் யாம் எம்முள் உயிர்”, என்று உயிர் இரக்கத்தையே சன்மார்க்கத்தின் நுழைவாயிலாகக் கொண்டு ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுருத்தியவர் வள்ளலார்.

எவ்வித ஆதாரமும் இல்லாத ஏழைகளின் பசிப்பிணி போக்குவதற்காக 1867 ஆம் ஆண்டில் வடலூரில் தருமச்சாலையைத் தோற்றுவித்த பிறகு அதன் கிளைச் சாலைகளாக மருத்துவ சாலை, சாத்திர சாலை, உபகாரச் சாலை, விருத்தி சாலை, உபாசனா சாலை, யோக சாலை, விவகார சாலை என ஏழு கிளைச்சாலைகளின் பெயரை வள்ளலார் அறிவித்தார்.

உபகாரம் என்றால் உதவி என்று பொருள். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளான பசியாற்றுவித்தல், மருத்துவ உதவி, கல்விக்கான உதவி போன்ற செயல்பாட்டினை கருத்தில் கொண்டே திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளைக்குச் சொந்தமான இவ்விடத்திற்கு “விழுப்புரம் வள்ளலார் உபகாரச்சாலை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • நிகழ்வுகள்
  • விழுப்புரம் உபகாரச்சாலை
  • பசியாற்றுவித்தல்
  • நடமாடும் தருமச்சாலை
  • மருத்துவ உதவி
  • தொடர்புக்கு

பேச: 94421 70011, 78713 57575

வாட்ஸ்அப்: 94861 76734

திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை

(வள்ளலார் உபகாரச்சாலை)
பிளாட் எண்:64&65 பைபாஸ்சிட்டி,
(பொன்னுசாமி ஓட்டல் எதிரில்),
சென்னை-திருச்சி புறவழிச்சாலை,
T. மேட்டுப்பாளையம் துணை அஞ்சலகம், முண்டியம்பாக்கம் வழி,  விக்கிரவாண்டி வட்டம்,   விழுப்புரம் மாவட்டம்.  605601