மனிதர்களுக்கு ஏற்படும் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், மற்றும் கொலை போன்ற ஏழு வகையான துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக கிளைச் சாலைகளை தோற்றுவித்தார் வள்ளலார்.
ஒவ்வொரு கிளைச் சாலைகளும் தனித்துவமான வேலைத் திட்டங்களை முன்வைத்து தொடங்கப் பட்டதாகும்.
பசிப்பிணி துயர்துடைப்பு மட்டுமல்லாமல், மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து அவர்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இச்சாலைகளின் நோக்கமாகும்,
அந்த வகையில் தமிழகத்தில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளையின் செயற்பாட்டிற்கு பொருத்தமான பெயராக இருக்கும் என்பதால் உபகாரச் சாலை என்கிற பெயரை தேர்ந்தெடுத்தோம்.
உபகாரச் சாலையை தோற்றுவித்தவர் வள்ளலார் என்பதால் வள்ளலார் உபகாரச் சாலையாகவும் விழுப்புரம் மாவட்டத்தில் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் “விழுப்புரம் வள்ளலார் உபகாரச் சாலை” என்று முறையாக அழைக்கப்படுகிறது.
கிளைச் சாலைகளை வள்ளலார் அறிவித்து சுமார் 150 ஆண்டுகள் கடந்தும் அச் சாலைகளின் பெயரை அடையாளப்படுத்தி அறப்பணிகள் செய்யாதது பெரும் குறையே. உலகெங்கும் வாழும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர்கள் வரும் காலங்களில் அவரவர் பகுதிகளில் கிளைச்சாலைகளை தோற்றுவிக்க வேண்டும் என்பது எங்களின் கருத்தாகும்.